நகைக்கும் வன்முறை – ஷஹிதா

Written by ஷஹிதா   // April 14, 2013   // 3 Comments

nagaikum vanmurai
இல்லை
இதென்
இந்த நடுக்கம் நிஜம்

உள்ளுக்குள் ஊடுறுவும் இந்தக் குளிர் இதுவும்

ஊறும் விழிகளை உருட்டி விழிக்க
நீ பழக்கித் தந்தது போல்
இப்பொழுது இயல்வதில்லை
..அதிலும் தோல்வி

விரல்களுக்கு சுருக்கநீக்குக் களிம்பல்ல
உதறல் போக்கும் மருந்துகள் தேவை
இன்னொரு கரத்தின் வெம்மை குறித்த
என் ஆர்வம் பேசி
ஆக இருப்பது என்ன?
விட்டுவிடேன்

கொத்துகொத்தாய் கேசம்
உப்புப் பிசுபிசுத்தபடிக்கு
தலையணையில் உதிர்ந்திருக்கக்கண்டு
அசூயை அடைகிறாய்?
எப்படியும் என்னது மட்டும் தானே அது

அப்புறமும்
இலக்கில்லாமல் அலையும் என் பார்வையை
உன் புறமாய் குவித்துவிட முயலும்
உன் முனைப்பில் இருக்கிறது
உலகின் ஒட்டு மொத்த வன்முறையும் / நகைச்சுவையும்


Tags:

2013 ஏப்ரல்

கயல்விழி முத்துலட்சுமி

தமிழ் புத்தாண்டு சிறப்பிதழ்

ஷஹிதா


Similar posts

3 COMMENTS

  1. By பொன்.வாசுதேவன், April 14, 2013

    //அப்புறமும்
    இலக்கில்லாமல் அலையும் என் பார்வையை
    உன் புறமாய் குவித்துவிட முயலும்
    உன் முனைப்பில் இருக்கிறது
    உலகின் ஒட்டு மொத்த வன்முறையும் / நகைச்சுவையும்//

    நன்று.

    Reply
  2. By ரமேஷ் வைத்யா, April 15, 2013

    அதிர்ச்சியூட்டும் விஷயம் அழகாக எழுதப்பட்டிருக்கிறது.

    Reply
  3. By ramasamy kannan (க ரா), May 15, 2013

    அருமையா எழுதிருக்கீங்க ஷகி

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கயல்விழி முத்துலட்சுமி

தமிழ் புத்தாண்டு சிறப்பிதழ்

2013 ஏப்ரல்

2013 மே

சிறப்பாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன்

கவிதை

கட்டுரை

ராமலக்‌ஷ்மி

கதைகள்

ஷஹிதா

அமைதிச் சாரல்

தமிழரசி செல்லம்மா

கட்டுரைகள்

துளிர்

சிறுவர் இதழ்

மாத இதழ்

வள்ளுவர்

வாசு பாலாஜி

கிரிக்கெட்

ஆசியக் கோப்பை

அரவிந்தன்

ஷைலஜா

கன்னடம்

ஞானபீடம்